Home / News in Tamil (page 127)

News in Tamil

தளபதி-60யில் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா?

vijay-story_647_062216110217

இளைய தளபதி விஜய் தற்போது விஜய்-60யில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்து முடிந்தது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியாக நடிக்கின்றார், விஜய்யும் இதில் கல்லூரி மாணவனாக வருகிறார் என முன்பே கூறப்பட்டது. அப்படி பார்த்தால் விஜய் இந்த படத்தில் மருத்துவம் படிப்பவராக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் கல்லூரி மாணவனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகர் சங்க நிர்வாகிகள்மீது கமிஷனர் அலுவலகத்தில் வாராகி புகார்

201608300916557510_varahi-complaint-to-commissioner-office-to-Heeding-actor_SECVPF

நடிகர் சங்க உறுப்பினர் வாராகி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நடிகர் சங்கத்துக்கு எதிராக போட்டி புகார் மனு ஒன்றை அவர் அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வருகிறேன். கடந்த 3-ந்தேதி தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகிய 3 பேருக்கும், சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக மனு அனுப்பினேன். 15 …

Read More »

விக்ரமின் இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் இதோ

201608301107168954_Irumugan-Release-date-and-censor-results-here_SECVPF

‘இருமுகன்’. இதில் இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் விக்ரமுடன், நயன்தாரா, நித்யா மேனன், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து, சமீபத்தில் படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியானது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த பாடல்களும், படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, படம் எப்போது வெளியாகும் என பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், …

Read More »

தனுஷின் வடசென்னையில் இப்படியா நடிக்கின்றார் அமலா பால்?

451691-amalapaul

இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த பிறகு தன் முழுக்கவனத்தையும் படங்களில் தான் செலுத்தி வருகிறார். தற்போது தனுஷிற்கு ஜோடியாக வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவர் மீனவப்பெண்ணாக நடிக்கின்றாராம், இதற்காக அமலா பால் அவர்களின் பேச்சு, உடை என அப்படியே இருக்க வேண்டும் என்பதற்காக ஸ்பெஷல் ட்ரையினிங் எடுத்து வருகிறாராம். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் கலந்துக்கொள்ள இருப்பதாக கூறப்படுகின்றது.

Read More »

அஜித்தின் தல 57வது படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது?

Ajith-Kumar_ibnlive

தல 57வது படத்தின் படப்பிடிப்பு தற்போது வெர்ஷாஸ்கா அணைக்கட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது. அங்கு எடுத்த சில புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரத்திற்குள் படக்குழுவினர் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிடுவார்களாம். அதோடு இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அக்டோபரில் நடக்கும் என்று கூறப்படுகிறது.

Read More »

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்..!

Rajini-Kabali-to-speak-in-Malay

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கபாலி வெற்றியால் மீண்டும் ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இப்படத்தை தனுஷ் தயாரிக்கின்றார். இந்நிலையில் இப்படம் அனைவரும் கபாலி படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டது, நம் தளத்தில் கூட இதுக்குறித்து தெரிவித்து இருந்தோம். ஆனால், நெருங்கிய வட்டாரங்களின் மூலம் கிடைத்த தகவலின்படி இவை கபாலி-2 இல்லை முழுக்க, முழுக்க புதுக்கதை என கூறப்படுகின்றது.

Read More »

தன் திரைப்பயணத்தில் பிரச்சனையை சந்திக்கும் சிவகார்த்திகேயன்

siva-karthikeyan-in-remo-poster-974-484x350

சிவகார்த்திகேயன் அவர் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எந்த ஒரு பிரச்சனையிலும் அவர் தலையிடுவது இல்லை. இந்நிலையில் இவர் தொடர்ந்து 24AM நிறுவனத்திற்கு மூன்று படங்களுக்கு கால்ஷிட் கொடுத்துள்ளார், இதில் ரெமோ முடிந்துவிட்டது. இதன் பிறகு மோகன் ராஜா, பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார், ஆனால், இதற்கு முன் இவர் ஸ்டுடியோ க்ரீன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவர்களுக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார். அவர்களுடைய படங்களில் நடிக்காமல் நீண்ட நாட்களாக …

Read More »

சேரன் கூறிய ஈழத்தமிழர்கள் பற்றிய கருத்துக்கு விஷால் பதிலடி..!

vishal

சமீபத்தில் சேரன் ஈழத்தமிழர்கள் குறித்து சில சர்ச்சையான கருத்துக்களை கூறினார். பின் அவரே அதற்கு விளக்கமும் கொடுத்துவிட்டார். ஆனால், தொடர்ந்து அவர் மீது எதிர்ப்புக்கள் வந்துக்கொண்டே இருக்கின்றது, இயக்குனர் சீமான் அவர்களும் இதை கண்டித்தார். தற்போது விஷால் ‘அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் இலங்கை தமிழர் பற்றிய பேசியது தேவையற்றது. இலங்கைத் தமிழர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை தவிர்ப்போம். அவர்கள் இப்போதாவது அமைதியில் வாழட்டும்’ என கூறியுள்ளார்.

Read More »

பாக்ஸ் ஆபிஸை கலக்கிய தர்மதுரை- வசூல் இத்தனை கோடியா?

Dharmadurai Pongal Celebration Stills

விஜய் சேதுபதி நடிப்பில் தர்மதுரை ரசிகர்களிடன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் விஜய் சேதுபதி திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்துள்ளது. இப்படம் சென்னையில் மட்டும் தற்போது வரை சுமார் 2.95 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாம். ஏற்கனவே இந்த படம் சூப்பர் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது. விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் இது மூன்றாவது ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

ராதிகா கொடுத்த பார்ட்டியால் தற்போது ஓடி ஒளியும் அருண் விஜய்

Arun-Vijay

நடிகர் அருண் விஜய் சமீபத்தில் ராதிகா தன் மகள் திருமணத்திற்கு கொடுத்த மது விருந்தில் கலந்துக்கொண்டார். அப்போது நிதானம் இழந்த அருண் விஜய் வண்டியை போலிஸ் கார் மீதே மோதி விபத்து ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட கூறியுள்ளனர், ஆனால், இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.

Read More »