Home / News in Tamil / இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட பகடி ஆட்டம் பர்ஸ்ட் லுக்..!

இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட பகடி ஆட்டம் பர்ஸ்ட் லுக்..!

நடிகர் ரகுமான் ‘பகடி ஆட்டம்’ என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் இயக்குனர் பாண்டிராஜ் டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு #PagadiAttam என்ற ஹேஷ் டேக் சென்னை ட்ரெண்டிங்கில் உள்ளது.

இப்படத்தை மரம் மூவிஸ் நிறுவனம் சார்பாக டி.எஸ்.குமார், கே.காமராஜ் மற்றும் பரணி மூவிஸ் சார்பாக ஏ.குணசேகர், டி.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘பகடி ஆட்டம்’.

இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயரதிகாரியாக நடிக்கிறார். ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்த கௌரி நந்தா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் இவர் தைரியமான ஆட்டோ ஓட்டும் பெண்ணாக நடிக்கிறார் கௌரி நந்தா.

மேலும் படத்தில் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்கே சந்திரன் இயக்குகிறார்.

About models

Check Also

WhatsApp Image 2017-01-20 at 12.46.51 PM

மீடியாவை உள்ளே விடாததால் நடிகர் சங்கம் மவுன போராட்டத்தில் சலசலப்பு

நடிகர் சங்கம் சார்பில் நடிகர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்தில் நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *